

சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், வணிகவியல் பாடத்தில் அதிகபட்சமாக 4,634 பேரும், குறைந்தபட்சமாக விலங்கியல் பாடத்தில் 22 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
12-ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர். இதில் மாணவியர் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655. தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998, கிட்டத்தட்ட 93.76 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் மாணவிகள், 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 - 96.32 சதவீதம். மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 - 90.96 சதவீதம். மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்
வணிகவியலில் 4,634 பேர் சதம்: இயற்பியல் பாடத்தில் 634 பேரும், வேதியியல் பாடத்தில் 1500 பேரும், உயிரியல் பாடத்தில் 1541 பேரும், கணிதப் பாடத்தில் 1858 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தாவரவியல் பாடத்தில் 47 பேரும், விலங்கியல் பாடத்தில் 22 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 3827 பேரும், வணிகவியல் பாடத்தில் அதிகபட்சமாக 4634 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
மேலும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 4540 பேரும், பொருளியல் பாடத்தில் 1146 பேரும், கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 2816 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 1151 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.