Published : 20 Jun 2022 11:34 AM
Last Updated : 20 Jun 2022 11:34 AM

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு | அரசுப் பள்ளிகளில் 89.06% தேர்ச்சி: 246 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

சென்னை: 12 ஆம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 246 பள்ளிகள் 100 சதவீதம் தேர்வு பெற்றள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர், இதில் மாணவியர் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655. தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998, கிட்டத்தட்ட 93.76 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இதில் மாணவிகள், 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 , 96.32 சதவீதம். மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893, 90.96 சதவீதம். மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்

தமிழகத்தில் மொத்தம் 7499 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.06 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.87 சதவீதம், தனியார் பள்ளிகள் 99.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 94.05 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 86.60 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 96.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 2628 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 246.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x