

அரவக்குறிச்சி தொகுதியில் வாக் குக்கு பணம் விநியோகம் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான வேட் பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக, ‘தி இந்து’ விடம் அவர் கூறியதாவது:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அங்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத் தொகுதியில் அதிமுகவினருக்கு வேண்டிய அன்புநாதன் என்பவரது வீட்டில் ரூ.4.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமுக வேட் பாளரின் வீடு மற்றும் அவரது மகன் வீடுகளில் நடந்த சோதனையில் ரூ.1.98 கோடி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
இதனை காரணமாக குறிப்பிட் டுள்ள தேர்தல் ஆணையம், அரவக் குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி யில் நேர்மையாகவும், சுதந்திரமாக வும் வாக்குப்பதிவு நடத்துவதற் கான சூழ்நிலை இல்லாததால், அங்கு 16-ம் தேதி நடக்க வேண் டிய தேர்தலை, 23-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள் ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஆணையத்தால் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால், தேர்தலை ஒத்திவைப்பதற்குப் பதிலாக ரத்து செய்ய வேண்டும். அந்த தொகுதிக்கு புதிய அட்ட வணை அறிவித்து, மீண்டும் வேட்பு மனுக்களை பெற்று தேர்தல் விதி களின்படி தேர்தலை நடத்த வேண் டும்.
அத்துடன், தேர்தல் தள்ளி வைப்பு அல்லது ரத்து செய்யப் படுவதற்கு அதிமுக, திமுக ஆகிய இரு கட்சி வேட்பாளர்கள்தான் காரணம் என்ப தால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் மீது போதிய ஆதாரங்கள் இருந்தால் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு தொகுதியில் தேர்தலை நடத்த முடியாத அளவுக்கு பணம் விளையாடியுள்ளது எனில் அது பெரிய குற்றம். அந்த குற்றத்துக்கு காரணமானவர்கள் என தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டும் வேட் பாளர்களை, மீண்டும் 23-ம் தேதி நடப்பதாக அறிவித்துள்ள தேர்தலில் போட்டியிட அனுமதித் தால், ‘நாங்கள் ஏற்கெனவே கொடுத்த பணத்துக்கு வாக்களியு ங்கள்’ என இரு வேட்பாளர்களும் வாக்காளர்களை கேட்பது போன்ற நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.