சிறுவாணி அணை நீர் சேமிப்பு: கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சிறுவாணி அணை நீர் சேமிப்பு: கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published on

சென்னை: சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி தலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரித்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என்றும், கேரள முதலமைச்சர் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in