

சென்னை: தமிழகம் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு 5 மாவட்டங்களில் நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாடு சீர்திருத்த பள்ளிகள் மற்றும் ஒழுக்க கண்காணிப்பு பணிகளில் அடங்கிய, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவியில் உள்ள 16 காலி இடங்களுக்கு, கணினி வழி தேர்வு இன்று நடைபெற்றுவருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது.
காலை 9:30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வுகளும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாவது தாள் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு, காலை 9:00 மணிக்கு மேல் தேர்வு கூடத்துக்கு வருவோர், தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படவில்லை. 3,539 பேர் இந்த தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ளனர்.