Published : 19 Jun 2022 05:00 AM
Last Updated : 19 Jun 2022 05:00 AM
சென்னை: அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாநிலங்களில் நடைபெறும் போராட்டம் காரணமாக, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சந்த்ரகாச்சி - சென்னை சென்ட்ரலுக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட ஏசி அதிவிரைவு ரயில்(22807), சென்னை சென்ட்ரல் -ஹவுராவுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட அதிவிரைவு ரயில் (12840), தனபாத் - ஆலப்புழாவுக்கு நேற்று முன்தினம் மதியம் புறப்பட்ட விரைவு ரயில் (13351), டாடாநகர் - யஸ்வந்த்பூருக்கு நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்ட அதிவிரைவு ரயில் (12889), திருச்சிராப்பள்ளி - ஹவுராவுக்கு நேற்று முன்தினம் மதியம் புறப்பட்ட அதிவிரைவு ரயில் (12664), புதிய தின்சுகியா - கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட அதிவிரைவு வாராந்திர ரயில் (22502), யஸ்வந்த்பூர் - ஹவுராவுக்கு நேற்றுமுன்தினம் புறப்பட்ட ரயில் (12864) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் - சாப்ராக்கு நேற்று புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12669) ரத்து செய்யப்பட்டது. அதேபோல், தனபூர் - கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு நேற்று இரவு புறப்பட வேண்டிய ரயிலும் ரத்து செய்யப்பட்டது.
ஹைதராபாத் - சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (12604), ஹைதராபாத் - தாம்பரத்துக்கு இயக்கப்படும் சார்மினார் விரைவு ரயில் (12760) ரத்துசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில்கள் வழக்கம்போல மீண்டும் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்திலும் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT