Published : 19 Jun 2022 07:44 AM
Last Updated : 19 Jun 2022 07:44 AM

முக்கிய வழக்குகளில் ஆஜராக 6 மூத்த வழக்கறிஞர்கள் குழு - தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்காக வாதிட அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பதவி வகிக்கிறார். இவரது தலைமையில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களும், சிறப்பு அரசு வழக்கறிஞர்களும், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரும், அரசு ப்ளீடரும், குற்றவியல், உரிமையியல் அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர்த்து மாநகராட்சி, போக்குவரத்து, ஆவின், கூட்டுறவு, அறநிலையத் துறை என அந்தந்தத் துறை சார்பில் ஆஜராகி வாதிட அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, தமிழக அரசு சார்பில் தொடரப்படும் அல்லது தமிழக அரசுக்கு எதிரான முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிட மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம்.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முக்கிய வழக்குகளில் தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிடும் வகையில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், எம்.கே.கபீர், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், எம்.அஜ்மல்கான், ஐசக் மோகன்லால் ஆகிய 6 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் ஆகியோர் திமுகஎம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x