

`தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தற்போதைய வெளிப்படையான மாணவர் சேர்க்கை முறை நீடிப் பதை உறுதி செய்ய வேண்டும். எந்தக் காலத்திலும் தேசிய நுழைவுத்தேர்வை நடத்த தமிழகத்தை கட்டாயப்படுத்தக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத் துள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு நேற்று அவர் எழுதிய கடிதம்:
மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைத் தேர்வு ( நீட்) எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’ தேர்வு நடத்துவதில் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க அவசரச் சட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி.
இதன்மூலம், நடப்பாண்டு மருத்துவப் படிப்புகளில் சேர முயற்சிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர் மன உளைச்சலில் இருந்து விடுபட்டுள் ளனர். இந்த அவசரச் சட்டம் இந்த ஆண்டுக்கு மட்டும் தற் காலிக தீர்வளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தமிழகத்தில் 2005-ம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நடை முறையை ஒழுங்குபடுத்த எடுக்கப் பட்ட நடவடிக்கைகளை முன்ன தாக எழுதிய பல கடிதங்களில் தெரிவித்திருந்தேன். இந்த படிப்புகள் தொடர்பாக கவன மாக ஆய்வு செய்த பிறகே நுழை வுத்தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்தது. அதன்பின், மருத்துவ படிப்புகள் தொடர்பாக 2006-ம் ஆண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப் பட்டது. இந்த சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உச்ச நீதிமன்றத் தால் உறுதிப்படுத்தப்பட்டதாகும்.
இந்நிலையில், மத்திய கல்வி வாரியம் மூலம் நாடு முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும். தமிழகத்தில், தற்போது மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப் படையான கொள்கை மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
நுழைவுத் தேர்வில் கிராமப்புற ஏழை மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடி யாது. பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ததால் சமூக, பொரு ளாதாரத்தில் பின்தங்கிய மாண வர்கள் பெருமளவு பயன்பெற்றனர்.
மருத்துவ மேற்படிப்புகளில், மலைவாழ் மக்கள் உள்ள பகுதி களில் குறைந்த காலம் சேவை புரிய விருப்பம் தெரிவிப்ப வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது. இதன்மூலம், அரசு மருத்துவமனைகளில் மருத்து வர்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.
தற்போது அறிமுகப்படுத்தப் படும் தேசிய தகுதி மற்றும் நுழை வுத்தேர்வு மாநில அரசின் கொள் கைகள், சமூக, பொருளாதார திட்ட அமலாக்கத்தை சீர்குலைக் கும் வகையில் உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல் லூரிகளில் தற்போதைய வெளிப் படையான மாணவர் சேர்க்கை முறை நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்திலும் தேசிய நுழைவுத்தேர்வை நடத்த தமிழ கத்தை கட்டாயப்படுத்தக் கூடாது.
இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.