

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானத்தால் போலீஸ் அதிகாரி, மாணவர் உட்பட 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த வர் செந்தில்குமார்(45). விருகம் பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார். இவரது மனைவி சாரதா (40). கடந்த 7-ம் தேதி செங்கல்பட்டு அருகே செந்தில்குமார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோ தனை செய்து பார்த்ததில் மூளையில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி அவர் மூளைச் சாவு அடைந்தார். செந்தில்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அறுவைச் சிகிச்சை மூலம் அவரது உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் இதய வால்வுகளை டாக்டர்கள் எடுத்தனர். டாக்டர் முகமது ரேலா தலைமையிலான குழுவினர், சென்னையை சேர்ந்த 43 வயதுடைய வியாபாரிக்கு கல்லீரலை பொருத்தினர்.
டாக்டர் எஸ்.வெங்கடராமணம் தலைமையிலான குழுவினர், சென்னையை சேர்ந்த 33 வயது போலீஸ் அதிகாரிக்கு ஒரு சிறுநீரகத்தையும் மற்றொரு சிறுநீரகத்தை நெய்வேலியைச் சேர்ந்த 19 வயது மாணவருக்கு டாக்டர் கே.நடராஜன் தலைமையிலான குழுவினரும் பொருத்தினர்.
கண்கள் மற்றும் இதய வால்வு கள் தேவையானவர்களுக்கு பயன்படுத்து வதற்காக மருத்துவ மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.