திமுக 100 தொகுதிகளில் வெற்றி பெறுவதை தடுக்க சதி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக 100 தொகுதிகளில் வெற்றி பெறுவதை தடுக்க சதி: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
1 min read

‘திமுக 100 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அதிமுகவினர், அதிகாரிகள் சதி செய்கின்றனர்’’ என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு அளித்தார். இது தொடர்பாக ஸ்டாலின் கூறியதாவது:

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு 100 தொகுதிகள் கிடைத்து விடக் கூடாது என்ப தற்காக அதிமுகவினர், அதிமுக ஆதரவு அதிகாரிகள், காவல்து றையினர் வாக்கு எண்ணிக்கையை பல்வேறு தொகுதிகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

குறிப்பாக, மயிலம், திருவண்ணாமலை, தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம் உள்ளிட்ட 20 முதல் 25 தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக் கப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தொடர் பாக நானே தொலைபேசியில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளி்த்தேன். வழக்கறிஞர் அணியினரும் புகார் அளித் தனர். நான் தற்போது நேரிலும் புகார் அளித்துள்ளேன். முறைகேடு ஏதும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். ரூ.570 கோடி கண்டெய்னர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியுள்ளோம். தேவைப்பட்டால் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள அதிமுகவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2011 தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த முறையாவது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in