Published : 14 May 2016 09:57 AM
Last Updated : 14 May 2016 09:57 AM

உற்சாகத்துடன் கருணாநிதி பிரச்சாரம்: ஸ்டாலினின் உழைப்பு திமுகவுக்கு பெரிய பலம் - ஆற்காடு வீராசாமி கருத்து

கருணாநிதியின் உற்சாக பிரச் சாரமும் ஸ்டாலினின் கடின உழைப்பும் திமுகவுக்கு மிகப் பெரிய பலம் என்று திமுக முன்னாள் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட் டத்தில் இருக்கும்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

உங்களின் 50 ஆண்டுகால தேர்தல் அனுபவத்தில் இப்போ தைய பிரச்சாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் வரை தேர் தலில் ஜனநாயகம் இருந்தது. களத்தில் மட்டுமே போட்டியா ளர்கள். மற்றபடி நண்பர்களாக இருந்தோம். அதிமுக தொடங் கப்பட்ட பிறகு தேர்தல் கலாச் சாரம் அடியோடு மாறிவிட்டது. அப்போதெல்லாம் வீடு, வீடாக செல்லாவிட்டால் நாம் தேர்தலில் நிற்பதே தெரியாது. ஆனால், இன்று தகவல் தொழில்நுட்ப புரட்சியால் பிரச்சாரம் எளிதாகியுள் ளது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளால் திருவிழா போல நடந்த தேர்தல் பரபரப்பை இழந்துள்ளது.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது மிகப்பெரிய பிரச்சி னையாக உருவெடுத்துள்ளதே?

வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுப்பது அப்போ தும் இருந்தது. 1960-களில் கூலி வேலைக்குச் செல்லும் மக்களை ஓட்டு போட வைப்பதற்காக ஒரு நாள் கூலியை சில வேட்பாளர்கள் கொடுப்பது வழக்கம். அன்று 50 பைசா, ஒரு ரூபாய் கொடுத் தார்கள். இன்று அது ரூ.500, ரூ.1,000 ஆக மாறியுள்ளது.

2011-ல் திமுகவின் தோல்விக்கு மின்வெட்டுதான் காரணம் என்பதை ஏற்கிறீர்களா?

திமுகவின் தோல்விக்கு மின்வெட்டும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. திமுக தோற்றால் அதற்கு மின்வெட்டும் ஒரு காரணமாக இருக்கும் என தேர்தலுக்கு முன்பாகவே கூறி யிருந்தேன். ஆனால், திமுகவின் தோல்விக்கு மின்வெட்டு மட்டும் காரணம் அல்ல.

தற்போது தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறாரே?

திமுக ஆட்சியில் மின்வெட் டைப் போக்க புதிய மின்திட் டங்களை கொண்டு வந்தோம். அப்போது தொடங்கப்பட்ட மின்திட்டங்கள் மூலமாகவே தற்போது மின்சாரம் கிடைக் கிறது. கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தொடங்கப் பட்ட திட்டங்கள் மூலம் ஒரு யூனிட் மின்சாரம்கூட உற்பத்தி செய்யப்படவில்லை.

இப்போதெல்லாம் கருணா நிதியுடன் உங்களை பார்க்க முடியவில்லையே?

அதற்கு எனது உடல்நிலையும் ஒரு காரணம். சுமார் 40 ஆண்டு காலம் காலை 8 மணிக்கு கருணாநிதி வீட்டுக்குச் சென்றால் இரவு 11 மணிக்குதான் திரும்புவேன். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர் கள். பொன்முடி, எ.வ.வேலு என இப்போது அவருக்கு பல புதிய நண்பர்கள் கிடைத்துவிட் டனர். எனது சேவை தேவைப் படவில்லை.

தேர்தல் பிரச்சாரத்திலும் உங்களை பார்க்க முடியவில் லையே?

உடல்நிலை சரியில்லாததால் 2011-ல் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தலில் எனது மகன் டாக்டர் கலாநிதிக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டேன். கிடைக்க வில்லை. அதனால் எனக்கு வருத் தம் இல்லை. முடிந்த அளவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து வரு கிறேன். கருணாநிதியுடன் சில பிரச் சார கூட்டங்களுக்கு சென்று வந் தேன்.

இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? பலமுனை போட்டி யாருக்கு சாதகம்?

திமுக பலம் பொருந்திய கட்சி என்பதால் பாமக, மக்கள் நலக் கூட்டணியால் எந்த பாதிப்பும் இருக்காது. அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டனர். முதல் தேர்தலைப்போல உற்சா கத்துடன் கருணாநிதி பிரச்சாரம் செய்து வருவதும், ஸ்டாலின் 234 தொகுதிகளுக்கும் ஓடி ஓடி அயராது உழைப்பதும் திமுக வுக்கு மிகப்பெரிய பலம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x