விஜயகாந்தின் `உங்களுடன் ஒருநாள்: கோவையில் தொண்டர்கள் விரக்தி

விஜயகாந்தின் `உங்களுடன் ஒருநாள்: கோவையில் தொண்டர்கள் விரக்தி
Updated on
1 min read

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் `உங்களுடன் ஒருநாள்' நிகழ்ச்சி யில், முதற்கட்டமாக கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய மாவட்டங் களின் நிர்வாகிகளையும், தொண்டர் களையும் வியாழக்கிழமை சந்தித் தார். நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பு சரிவர செய்யப்படவில்லை எனக் கூறி விஜயகாந்த்தை சந்திக்காமல் தொண்டர்கள் விரக்தியில் திரும்பிச் சென்றனர்.

கோவை ராவத்தூர் தோட்டத் தில் வியாழக்கிழமை கோவை மாநகர், வடக்கு, தெற்கு ஆகிய கட்சி மாவட்டங்களுக்கும், வெள்ளிக் கிழமை திருப்பூர் மாவட்டத்துக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை காலை 10 மணி முதல் கட்சி அடையாள அட்டை உள்ளவர்களை மட்டும் நிர்வாகிகள் அனுமதித்தனர். பத்திரிகையாளர்கள், புகைப்படக் காரர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி விட்டனர். நீண்ட க்யூவில் நின்ற தொண்டர்கள் பலர் அலைக்கழிப்பால் விரக்தியோடு விஜயகாந்த்தை சந்திக்காமல் திரும்பிச் சென்றதைக் காணமுடிந்தது.

தொண்டர்களிடம் சில நிமிடங்களே பேசிய விஜயகாந்த் பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இழுத்துப் பிடித்து வெளியே...

இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர், இந்த முறையாவது பழையபடி உள்ளூர் நிர்வாகிகள் மீதான புகார்களை காது கொடுத்து தலைவர் கேட்பார் என்று எதிர்பார்த்தோம். அதைச் சொல்லவே விடாதபடி புகைப்படம் எடுத்தவுடன் இழுத்துப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக அதிருப்தி நிர்வாகிகள் தயாராக இருந்தனர். எங்கள் கருத்தை தலைவரிடம் சொல்ல முடியவில்லை. வெறு மனே புகைப்படம் எடுத்து விட் டால் மட்டும் கட்சி வளர்ந்து விடுமா? இதுபோன்ற புகைப்பட நிகழ்ச் சிக்கு இதே ராவத்தூர் தோட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் புகைப்படம் எடுத்த வரலாறு உண்டு. ஆனால் இப்போது 5 ஆயிரம் பேர் புகைப்படம் எடுத்திருந்தாலே பெரிய ஆச்சரியம். பாதிக்கும் மேற்பட்டவர்கள், போட்டோ எடுத்தால் என்ன எடுக்காவிட்டால் என்ன என்று திரும்பி போய்விட்டனர் என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in