Last Updated : 21 May, 2016 08:43 AM

 

Published : 21 May 2016 08:43 AM
Last Updated : 21 May 2016 08:43 AM

5.78% - ல் ஆரம்பித்து 0.9% ஆக சரிந்த மதிமுகவின் வாக்கு வங்கி

மதிமுக, தான் சந்தித்த முதல் சட்டப்பேரவை தேர்தலில் 5.78 சதவீத வாக்கு வங்கியோடு கணக்கினை தொடங்கியது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுகவின் வாக்கு வங்கி 0.9 சதவீதத்துக்கு சரிந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1993-ம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோ நீக்கப் பட்டார். வைகோவுக்கு ஆதரவாக 9 மாவட்டச் செயலாளர்களும், 400 பொதுக்குழு உறுப்பினர்களும் திமுகவில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசி யல் கட்சியை 1994-ம் ஆண்டு தொடங் கினார் வைகோ.

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக முதன்முதலில் போட்டியிட்டது. திமுக, அதிமுகவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி வைத்து 177 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி யில் இருந்த மதிமுக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது பாஜக ஆட்சி கவிழ்ந்ததால் மீண்டும் நடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றது. 2001 சட்டப்பேரவை தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் 211 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 205 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. எனினும், அக்கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன.

2004 மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் அணியில் திருச்சி, வந்தவாசி, சிவகாசி, பொள்ளாச்சி தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2009 மக்களவைத் தேர்தலில் 4 இடங்களில் போட்டியிட்ட மதிமுக ஈரோட்டில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பின்னர், மதிமுகவின் தேர்தல் அங்கீகாரமும் ரத்தானது.

2011-ல் சட்டப்பேரவைத் தேர் தலையே மதிமுக புறக்கணித்தது. 2014 தேர்தலில் பாஜக-தேமுதிக-பாமக அணி யில் இருந்த மதிமுக 7 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக-ம.ந.கூட்டணி-தமாகா அணியில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் மதிமுக டெபாசிட் இழந்துள்ளது.

இது தொடர்பாக மதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “இது வரை போட்டியிட்ட தேர்தல்களிலேயே மதிமுகவுக்கு மிக மோசமான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, திமுக, அதிமுக துணை இல்லாமலேயே அதிக வாக்குகளை பெற்றோம். அவர்களோடு கூட்டணி வைத்துவிட்டு, வேறு கட்சி களுடன் கூட்டணி அமைத்தபோது தான் பெரியளவில் சரிவை சந்தித் துள்ளோம்’’ என்றார்.



மதிமுக பெற்ற வாக்குகளின் விவரம்

தேர்தல்கள் வாக்கு வங்கி சதவீதம்

1996

5.78%

2001

4.65%

2006

5.89%

2009(மக்களவை)

2.67%

2011

போட்டியில்லை

2014(மக்களவை)

2.57

2016

0.9 %



















FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x