சாதித் தீயை அணைக்காமல் ஊதிக்கொண்டிருந்தால் எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும்: மநீம

கமல்ஹாசன் | கோப்புப் படம்.
கமல்ஹாசன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: “இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும்” என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

சாதிப்பற்று கூடாது என்று மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, சாதி வெறியைத் தூண்டுவதுபோல பேசுவது ஏற்கத்தக்கதல்ல.பள்ளிகளில் பரவும் சா`தீ'... கற்றுக்கொடுக்க வேண்டியவரே கெட்டுப் போகச் செய்யலாமா?

இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க கடும் நடவடிக்கைகள் எடுப்பதுடன் ஆசிரியர், பெற்றோர், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும்'' என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in