Published : 17 Jun 2022 01:09 PM
Last Updated : 17 Jun 2022 01:09 PM

80% வாக்குறுதிகள் நிறைவேற்றம்; மீதமுள்ளதையும் நிறைவேற்றுவேன்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: " திமுக ஆட்சிக்கு வந்தபோது என்ன நிலை, ஒருபக்கம் கரோனா என்ற ஒரு கொடிய நோய், இன்னொருப்பக்கம் நிதிப்பற்றாக்குறை, கஜானா காலியாக இருந்த ஒரு கொடுமை, இதையெல்லாம் சமாளித்து 80 சதவீதத்திற்கு மேல் தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை காப்பாற்றியிருக்கிறோம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில்: "தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை மக்களிடத்தில் எடுத்து கூறினோமோ,அவைகள் ஓரளவுக்கு ஏன் 80 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்னும் 20 சதவீதம் இருக்கு, நான் இல்லையென்று கூறவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஒருபக்கம் கரோனா என்ற ஒரு கொடிய நோய், இன்னொருப்பக்கம் நிதிப்பற்றாக்குறை, கஜானா காலியாக இருந்த ஒரு கொடுமை, இதையெல்லாம் சமாளித்து 80 சதவீதத்திற்கு மேல் தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை காப்பாற்றியிருக்கிறோம். மிச்சம் இருக்கக்கூடிய அந்த 20 சதவீதத்தையும், நான் உறுதியோடு கூறுகிறேன், அதையும் உறுதியாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் காப்பாற்றுவேன்.

ஏதோ பொற்கிழி கொடுத்துவிட்டோம், நீங்கள் சென்று ஓய்வெடுங்கள் என்பதற்காக அது வழங்கப்படவில்லை. இன்னும் பல பணிகளை நீங்கள் செய்ய வேண்டும். ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும்தான் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x