

சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 22-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை நாடு முழுவதும் 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் 13 ஆயிரத்து 814 பேர் எழுதியுள்ளனர்.
இந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பின்வரும் இணையதள முகவரிகளில் தேர்வு முடிவு களை தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை >https://digilocker.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கே.கே.சவுத்ரி அறிவித்துள்ளார்.