Last Updated : 16 May, 2016 11:11 AM

 

Published : 16 May 2016 11:11 AM
Last Updated : 16 May 2016 11:11 AM

மாற்றத்தை 80% வாக்காளர்கள் விரும்புகின்றனர்: ராமதாஸ்

80 சதவிகித வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் வாக்களித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ''15 வது சட்டமன்ற தேர்தல் தற்போது நடக்கிறது. இத்தேர்தல் வித்தியாசமான தேர்தல். திராவிடகட்சிகள் மது, இலவசம், ஊழல கொடுத்து நாட்டை சின்னாபின்னப்படுத்திவிட்டார்கள். கடந்த ஓராண்டாக அன்புமணி வளர்ச்சி முன்னேற்றத்தை கொள்கை ஆவணத்தோடு தமிழக மக்களை சுற்றி சுழன்று தமிழக முன்னேற்றத்தைப்பற்றி சொல்லிவந்தார்.

தமிழக இளைஞர்களும், வாக்களிக்காத நடுநிலையாளர்கள், மதுவை உண்மையாக அன்புமணி ஒழிப்பார் என நம்புகிறார்கள் இந்த 3 பிரிவினரான 80 சதவீதத்தினர் தற்போது வாக்களித்து வருகின்றனர். 250, 500, 1000ஐ வாங்காத 80 சதவீத வாக்காளர்கள் அன்புமனியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 80 சதவிகித வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அன்புமணி மதுவை ஒழிப்பார் என உறுதியாக நம்புகிறார்கள்.

அன்புமணி முதல்வராவது உறுதி. முன்னாள் தேர்தல் கழிஷினர் கோபால் சாமி 20 தொகுதியிலாவது தேர்தலை நிறுத்தி இருக்கவேண்டும் என்றார். நாங்கள் எல்லா தொகுதியிலுல் நிறுத்தி இருக்கவேண்டும் என்று கூறிவந்தோம்'' என்று ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x