Published : 23 May 2016 08:26 AM
Last Updated : 23 May 2016 08:26 AM

எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதியா? ஸ்டாலினா?- நாளை முடிவு செய்யப்படும் என தகவல்

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதியா? மு. க.ஸ்டாலினா என்பது நாளை நடைபெறும் திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்துள்ளன. திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

திமுக கூட்டணிக்கு 98 எம்எல் ஏக்கள் இருப்பதால் சட்டப்பே ரவையில் கடும் சவாலை ஏற்ப டுத்த முடியும். எனவே, திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது. திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய் யப்படுபவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக முடியும்.

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 23 இடங்களில் வென்ற திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. 29 இடங்களில் வென்ற தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ் தைப் பெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட் சித் தலைவரானார்.

2011-ல் திமுக சட்டப்பேர வை கட்சித் தலைவராக மு.க.ஸ் டா லின், துணைத் தலைவராக துரைமுருகன், கொறடாவாக அர.சக்கரபாணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திரு வாரூர் தொகுதியில் வெற்றி பெற்ற கருணாநிதி ஒரு நாள் கூட சட்டப்பேரவை நிகழ்ச்சிக ளில் பங்கேற்கவில்லை. அவர் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்காதது பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியது.

அதற்கு பதிலளித்த கருணா நிதி, ‘சட்டப்பேரவையில் தான் அமர வசதியாக இருக்கை வசதி செய்யப்படவில்லை. வசதியான இடம் ஏற்படுத்தி வந்தால் கட்டா யம் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன்’ என தெரிவித்தி ருந்தார்.

இம்முறை திமுக கூட்டணிக் கு 98 எம்எல்ஏக்கள் இருப்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கருணாநிதி பங்கேற்பார். எனவே, அவர்தான் எதிர்க்கட்சித் தலை வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என திமுகவில் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், கருணாநிதிக்கு வயதாகிவிட்டால் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியாது. அவர் அமர்வதற்கு ஏற்ப இருக்கை வசதி யும் செய்யமாட்டார்கள். எனவே, மு.க.ஸ்டாலின்தான் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படு வார் என திமுகவில் மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக திமுக எம்எல்ஏ ஒருவரிடம் பேசியபோது, ‘திமுக தலைமை செயற்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. அதில் பங்கேற்க அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் கூட்டம் பற்றியோ, எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு பற்றியோ எந்த தகவலும் வரவில் லை. எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப் படவே வாய்ப்புகள் அதிகம்’ என்றார்.

திமுக முக்கிய நிர்வாகி ஒரு வரிடம் கேட்டபோது, ‘தொடர்ந்து 2-வது முறையாக திமுக ஆட்சியை இழந்துள்ளது. 2011 பேரவைத் தேர்தல், 2014 மக்க ளவைத் தேர்தல், 2016 பேரவைத் தேர்தல் என தொடர் தோல்வி களை திமுக சந்தித்துள்ளது. ஆனாலும், கருணாநிதி சோர்வ டையாமல் தேர்தல் முடிவுகளை அலசி ஆராய்ந்து அறிக்கை விட்டு வருகிறார். கூட்டணி கட்சித் தலை வர்களை சந்திக்கிறார். மாநிலங்க ளவை தேர்தலுக்கான வேட்பாளர் களை அதிமுகவே அறிவிக்காத நிலையில் கருணாநிதி அறிவித்துள் ளார். எனவே, கருணாநிதியே எதிர்க்கட்சித் தலைவரானாலும் ஆச்சரியப்பட முடியாது’ என்றார்.

அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிநிதியா? ஸ்டாலினா என திமுகவில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x