Published : 13 May 2016 07:53 AM
Last Updated : 13 May 2016 07:53 AM

சட்டப்பேரவைக்கு 16-ம் தேதி தேர்தல்: தமிழகத்தில் பிரச்சாரம் நாளை ஓய்கிறது - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் கான பிரச்சாரம் நாளை மாலை யுடன் ஓய்கிறது. இதையொட்டி இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர்.

தமிழகத்தில் 15-வது சட்டப்பே ரவைக்கான தேர்தல், வரும் 16-ம் தேதி நடக்கிறது. இதற்கான அறி விப்பை கடந்த மார்ச் 4-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளி யிட்டது. அன்று முதல் தமிழகம் முழுவ தும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

3,776 வேட்பாளர்கள்

இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தமாகா அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 6 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி முடிவடைந்தது. ஏப்ரல் 25-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா ஆர். கே. நகர் தொகுதியிலும், திமுக தலைவர் கருணாநிதி திருவாரூ ரிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 30-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. மே 2-ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 320 பெண்கள், 2 மூன்றாம் பாலினத் தவர் உட்பட 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அதி கபட்சமாக முதல்வர் ஜெயலலி தா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேரும் குறைந் தபட்சமாக ஆற்காடு, கூடலூர், மயிலாடுதுறையில் தலா 8 பேரும் போட்டியில் உள்ளனர்.

இறுதிக்கட்ட பிரச்சாரம்

முதல்வர் ஜெயலலிதா கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கினார். பல்வேறு இடங்களில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங் களில் அவர் பேசினார். சென் னையிலும் 2 நாள் பிரச்சாரம் செய்தார். திமுக தலைவர் கரு ணாநிதி கடந்த மாதம் 23-ம் தேதி சென்னையில் பிரச்சாரத்தை தெ ாடங்கினார். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கி ரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளை மாலை 5 மணியுடன் தமிழகத்தில் பிரச் சாரம் ஓய்கிறது. இதனால், கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை நேற்று நெல்லை யில் தனது பிரச்சாரத்தை முடித்துவிட்டார். திமுக தலைவர் கருணாநிதி நாளை மாலை சென்னை சிந்தாதிரிப்பேட்டை யில் நடக்கும் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கி றார். தேமுதிக தலைவர் விஜ யகாந்தும் சென்னையில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

பிரச்சாரம் ஓய்வதையடுத்து, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள், நாளை மாலை முதல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள து.

நாளை மாலை 6 மணி முதல் 16-ம் தேதி வாக் குப்பதிவு முடிவடையும் வரை கருத்துக்கணிப்புகளை வெளியி டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பார்வையாளர்கள்

இதற்கிடையே, தமிழகத்தில் கடைசி நேர பணப் பட்டுவா டாவை தடுக்க தேர்தல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர் பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூ றியதாவது:

தமிழகத்தில் கடைசி நேர பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினரின் எண் ணிக்கை 6,112-ல் இருந்து 7,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை களில் துணை ராணுவப்படையினர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் போட்டி யிடும் தொகுதிகள், செலவினம் அதிகம் உள்ள தொகுதிகள் என மொத்தம் 94 தொகுதிகளில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். இந்த தொகுதிகளில் 25 தொ குதிகள் அதிசெலவினம் என பிரிக்கப்பட்டு இவற்றில் கூடுதல் ரோந்துப் பணிக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.

இதுதவிர, பணம் தொடர்பான சோதனையின்போது வருமான வ ரி புலனாய்வுப் பிரிவினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்வதில் கா லதாமதம் ஏற்படு வதாக தலைமை தேர்தல் ஆணை யரிடம் தமிழக தேர்தல் பார்வை யாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, வருமானவரித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 13 பேர் சிறப்புப் பார்வையாளர்க ளாக தமிழகம் வந்துள்ளனர். 118 பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி களும் வந்துள் ளனர். அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொ குதியில் பறக்கும் படையினரின் வாகனத் தில் ரோந்துப்பணியில் உடன் செல்வர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x