தருமபுரியின் புதிய ஆட்சியராக சாந்தி பொறுப்பேற்பு

தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் சாந்தி
தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் சாந்தி
Updated on
1 min read

தருமபுரி: சேலத்தில் தமிழக பட்டு வளர்ச்சித் துறை அலுவலக இயக்குநராக பணியாற்றிய சாந்தி, தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த திவ்யதர்சினி சென்னை மகளிர் மேம்பாட்டு திட்ட ஆணைய அலுவலகத்திற்கு மாறுதலாகிச் சென்றார்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியராக சாந்தி நியமிக்கப்பட்டார். சேலத்தில் இயங்கி வரும் தமிழக பட்டு வளர்ச்சித் துறை அலுவலக இயக்குநராக பணியாற்றி வந்தார்.

இவர் பட்டு வளர்ச்சி துறைக்கு முன்னதாக, சேலத்தில் இயங்கும் அரசு நிறுவனமான சேகோ சர்வ் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இதனிடையே, தருமபுரி மாவட்டத்தின் 45-வது ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட சாந்தி "தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in