

ஸ்ரீராமானுஜரின் 1000-வது ஆண்டு தொடக்கத்தை முன் னிட்டு சென்னை நாரதகான சபாவில் வரும் 10-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு இசை, நடன, ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஆன்மிக மகான் ஸ்ரீராமானுஜர் கி.பி. 1017-ம் ஆண்டு தோன்றினார். அவரது 1000-வது ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் விதமாக ‘ஸ்ரீராமானுஜர் தரிசனம்’ என்ற தொடர் மேடை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக நாரதகான சபாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ உ.வே.கருணாகராச்சாரியார், வேளுக்குடி கிருஷ்ணன், தாமல் ராமகிருஷ்ணன், அனந்த பத்மநாபாச்சாரியார், அக்காரக் கனி ஸ்ரீநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னை டிடிகே சாலையில் உள்ள நாரதகான சபாவில் இசை, நடனம், ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவை வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை, அனைத்து நாட்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். ஸ்ரீராமானுஜரின் அவதார நோக்கம், அவரது ஆன்மிக சிந்தனைகள், அவர் இறைவன் மீது கொண்டிருந்த நம்பிக்கை, மக்கள் நலனுக்காக அவர் ஆற்றிய உரைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும்.
தமிழில் போதனைகள்
சென்னையை சேர்ந்த கவுஸ்துபா மீடியா ஒர்க்ஸ் நிறு வனம், பக்திசாகரம் டாட் காம் இணையதளம் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள் ளன. இதுகுறித்து கவுஸ்துபா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சோனியா கூறும்போது, ‘‘வைணவ வழியில் வந்த அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதன் அடுத்தகட்டமாக, ஸ்ரீராமானுஜரின் போதனைகளை தமிழில் மொழி பெயர்த்து, பொதுமக்கள் அனை வருக்கும் குறிப்பாக, இளைஞர் களுக்கு கொண்டு செல்ல உள்ளோம்’’ என்றார்.
இந்த நிகழ்வையொட்டி ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சார்பில் ‘ஸ்ரீ ராமானுஜர் 1000’ என்னும் சிறப்பு மலர் வெளியிடப்படு கிறது. பல்வேறு சான்றோர்கள், படைப்பாளிகள் இதில் மலரில் ராமானுஜரின் பன்முக ஆளுமையை விளக்குகிறார் கள். ரூ.90 விலை கொண்ட இந்த 104 பக்க வண்ணமயமான மலர், ராமானுஜரின் வாழ்வு, சிந்தனைகள், தொண்டுகள், அவர் செய்த சீர்திருத்தங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.