Published : 16 Jun 2022 06:22 AM
Last Updated : 16 Jun 2022 06:22 AM
ராமேசுவரம்: ஒரே வாரத்தில் ராமேசுவரம் கடற்பகுதியில் இரண்டு கடல் பசுக்கள் அருகருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் வனத்துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் கடல் பசு அதிக அளவில் உள்ளன.
கடந்த ஜுன் 7-ல் ராமேசுவரம் அருகே சின்னப்பாலம் பகுதியில் 170 கிலோ எடையுள்ள 5 வயதான கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
தொடர்ச்சியாக சின்னப்பாலம் பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மண்டபம் காந்தி நகர் பகுதியில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க 500 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள், இறைச்சிக்காக கடல் பசு வேட்டைகள், கடலில் புற்கள் பற்றாக்குறை, விசைப்படகுகள் மற்றும் பாறைகளில் மோதியும், வலைகளில் சிக்கியும் கடல் பசுக்கள் இறந்து அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அரியவகை உயிரினமான கடல் பசுக்கள் பற்றி மீனவர்களிடமும், கடலோரப் பகுதி பள்ளி மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT