

சரக்கு வாகனங்கள், பள்ளிப் பேருந்துகளில் அரசியல் பிரச் சாரக் கூட்டங்களுக்கு பொதுமக் களை அழைத்துச் செல்வதை தடை செய்ய வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளருக்கு தேர் தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சி கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றன. முக்கிய அரசி யல் கட்சிகளின் தலைவர்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் பிரச் சாரம் மேற்கொண்டு வருகின்ற னர். இக்கூட்டங்களுக்கு பொது மக்களை பள்ளி வாகனங்கள், சரக்கு வாகனங்களில் அழைத்து வருவதாக தேர்தல் ஆணையத் துக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக, உயர் நீதிமன்றத் திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் தபாஸ் குமார், தமிழக தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பள்ளிப் பேருந்துகள், பயணி கள் போக்குவரத்து அல்லாத டிரக் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு பொதுமக்கள் அழைத்து வரப்படு வதாக புகார்கள் வந்துள்ளன. இந்த வாகனங்களில் செல்வது, பொதுமக்களின் விலைமதிப்பில் லாத உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.
எனவே, மாநில அரசு மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு பொது மக்களை அழைத்துவர பள்ளிப் பேருந்துகளை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. வர்த்தக ரீதியிலான பேருந்துகளும் போக்கு வரத்துத்துறை அனுமதித்த வழித் தடத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். மேலும் தேர்தல் பிரச் சாரக் கூட்டத்துக்கு பொதுமக் களை டிரக் உள்ளிட்ட சரக்கு வாக னங்களில் அழைத்து வருவது முழு மையாக தடை செய்யப்படுகிறது.
இதற்கான உரிய உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும். இது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.