Published : 08 May 2016 11:25 AM
Last Updated : 08 May 2016 11:25 AM

ஜெயலலிதா முதல்வராகப் போவதில்லை: ஸ்ரீபெரும்புதூரில் சுப்பிரமணியன் சுவாமி பேச்சு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மனோகரன் போட்டியிடுகிறார், இவரை ஆதரித்து சனிக்கிழமையன்று பாஜக-வின் சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

அரசியலுக்கு வரும்போது ஒரு ரூபாய் கூட சொத்து இல்லை என்று கூறிய ஜெயலலிதா தற்போது வேட்பு மனுதாக்காலில் ரூ.120 கோடி சொத்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இதனால் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெறப் போகிறார். ஜெயலலிதா முதலவராகப் போவதில்லை, சசிகலாதான் முதல்வராகப் போகிறார். எனவே அதிமுகவுக்கு வாக்களிப்பது வீண்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஊழல்தான் காரணம். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியில் விடுதலைப்புலி ஆதரவாளருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு முக்கிய காரணம் ஊழல். தமிழக கடற்கரை மணலில் அதிக அளவில் தோரியம் உள்ளது. இதனைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இதிலும் ஊழல் உள்ளதால் இத்திட்டங்கள் தொடங்கப்படாமலேயே உள்ளது.

ஏழைகளுக்குத் தேவை அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதாகும், அதை விடுத்து ஸ்கூட்டர், டிவி தருகிறேன் என்பதெல்லாம் உங்கள் பாக்கெட்டிலிருந்து எடுத்த பணத்தை உங்களுக்கே திருப்பி தருவதாகும். அம்மா உணவகம், அம்மா பள்ளிக்கூடம் அம்மா ஸ்கூட்டர் போல் விரைவில் அம்மாவிற்கு ஜெயிலும் வரும்.

முத்துராமலிங்கத் தேவர் இருந்தார் அவர் தனது சொத்தே நாட்டுக்கு என்றார், ஆனால் தேவர் சமுதாயத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்து வரும் சசிகலாவோ நாட்டின் சொத்து எல்லாம் தனக்கே என்கிறார்.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஊழல்.

இவ்வாறு பேசினார் சுப்பிரமணியன் சுவாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x