Published : 15 Jun 2022 07:26 AM
Last Updated : 15 Jun 2022 07:26 AM

ஸ்விட்ச் இந்தியா நிறுவனம் சார்பில் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மின்சார பேருந்து அறிமுகம்

ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம் அறிமுகப்படுத்திஉள்ள புதிய மின்சார பேருந்து.

சென்னை: ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம் (ஸ்விட்ச்) எனப்படும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் கார்பன் நியூட்ரல் எலக்ட்ரிக் பஸ் மற்றும் இலகுரக வர்த்தக வாகன நிறுவனமானது இந்திய சந்தையில் ‘ஸ்விட்ச் EiV12' என்ற அதிநவீன மின்சார பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுமார் 10 ஆண்டுகளாக மின்சார வாகன உற்பத்தித் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஸ்விட்ச் நிறுவனம் EiV 12 லோ ஃப்ளோர், EiV 12 தரநிலை என 2 வகை பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பேருந்துகள் நம்பகத்தன்மை, ரேஞ்ச் மற்றும் பயண சவாரி வசதி ஆகியவற்றில் சிறந்தவையாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிறுவனம் தற்போது 600 பேருந்துகளின் ஆர்டரை முன்பதிவாகப் பெற்றுள்ளது.

புதிய பேருந்து அறிமுகம் குறித்து ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா கூறும்போது, “இந்தியாவில் எங்களின் அடுத்த தலைமுறை எலக்ட்ரிக் பேருந்து உற்பத்தியை தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இந்துஜா குழுமத்தின் வலுவான பாரம்பரியம் மற்றும் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவம், அசோக் லேலண்ட் வணிக வாகன சந்தை ஆகியவற்றின் மூலம் மின்சார பேருந்துகள் மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் மின்சார இலகுரக வாகனங்கள் ஆகியவை சிறந்து விளங்கும்” என்றார்.

ஸ்விட்ச் மொபிலிட்டி இந்தியா நிறுவன இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மகேஷ் பாபு கூறும்போது, “சிறந்த செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்குவதற்கு இந்த தளமானது தனித்துவமான மேம்பட்ட, உலகளாவிய மின்வாகன கட்டமைப்பைக் கொண்டுள்ளது” என்றார்.

இந்த பேருந்துகள் பல்வேறு பயன்பாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். இந்திய சந்தை மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட லித்தியம்-அயன் என்எம்சி கெமிஸ்டியுடன் கூடிய புதிய தலைமுறை உயர் திறன் கொண்ட, மாடுலர் பேட்டரிகள் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன.

மாடுலர் பேட்டரிகள் மூலம் ஒரு சார்ஜில் 300 கி.மீ. வரையும், டூவல் கன் வேகமான சார்ஜிங் மூலம் 500 கி.மீ. வரையும் செல்ல முடியும். இவ்வகை பேட்டரிகள் நீண்ட ஆயுளுடன், சிறந்த செயல்திறனையும் வழங்கும். மேலும் இ-பஸ்ஸின் பராமரிப்பும் விரைவாக சிரமமின்றி செய்ய முடியும். நிறுவனம் பற்றியும், தயாரிப்புகள் குறித்தும் அறிய www.switchmobility.tech இணையதளத்தை காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x