Published : 15 Jun 2022 07:56 AM
Last Updated : 15 Jun 2022 07:56 AM
ஓசூர்: ஓசூர் பகுதியில் மதுவிலக்கு போலீஸாரால் கைப்பற்றப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 7153 மதுபாட்டில்கள் வனப்பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை என மூன்று மதுவிலக்கு அமல்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓசூர் நகரம் கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள மதுபானங்களை ஓசூர் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வருவதை தடுக்கும் வகையில் தமிழக எல்லையில் ஓசூர் நகரை ஒட்டியுள்ள ஜுஜுவாடி உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் மதுவிலக்கு போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனையில் கடந்த ஏப்ரல்,மே ஆகிய இரண்டு மாதங்களில் தமிழகத்துக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட கர்நாடகா, ஆந்திரா, கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 7153 மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த மதுபாட்டில்கள் அனைத்தும் சானமாவு வனப்பகுதியில் மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், மதுவிலக்கு டிஎஸ்பி சிவலிங்கம், எஸ்.ஐ. செல்வராகவன் மற்றும் மதுவிலக்கு சிறப்பு பிரிவுபோலீஸார் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலமாக மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT