

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பேத்துப் பாறை மலை கிராமத்தில் இரவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலாவரும் ஒற்றை காட்டு யானையால் கிராம மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மலைக் கிராமப் பகுதிகளான அஞ்சுவீடு, அஞ்சுரான் மந்தை, பாரதி அண்ணாநகர், பேத்துப்பாறை, புலியூர், தாண்டிக்குடி, ஆட லூர், பன்றிமலை உள்ளிட்ட மலைகிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் யானைகள் நட மாட்டம் அதிகம் உள்ளது.
இந்த யானைகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை அழிப்பது வாடிக்கையாக உள் ளது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் அவ்வப்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெருமாள்மலை அருகேயுள்ள பேத்துப்பாறை மலைகிராமத்தில் இரவு நேரத்தில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. சில தினங் களுக்கு முன்பு கிராமத்தில் கடையை உடைத்து, அங்கு வைக் கப்பட்டிருந்த மூட்டையில் இருந்த உப்பை தின்றுவிட்டு சென்றது யானை.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் பேத்துப்பாறை மலை கிராமத்துக்கு வந்த ஒற்றையானை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத் திருந்த இருசக்கர வாகனங் களை தள்ளிவிட்டும், கடையின் மேற்கூரையை பெயர்த்துவிட்டும் சென்றது. இரவு நேரத்தில் வேலைக்குச் சென்றுவிட்டு தாம தமாக வீட்டுக்கு வரமுடியாத நிலையில் கிராம மக்கள் உள் ளனர். மாலை நேரத்துக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர்.
தினமும் இரவு பேத்துப்பாறை கிராமத்துக்குள் புகுந்து வரும் காட்டு யானையை விரட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதையடுத்து வனத் துறையினர் யானையை விரட்டும் பணியைத் தொடங்கி உள்ளனர்.