Published : 12 May 2016 04:37 PM
Last Updated : 12 May 2016 04:37 PM

பணப் பட்டுவாடா நடக்கிறதா?- உங்கள் தொகுதி நிலவரம் பகிருங்கள்

விருத்தாச்சலம் தாலுகாவைச் சேர்ந்த இரத்தின புகழேந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இது:

"நேற்று பூத் ஸ்லிப் கொடுக்க ஒருத்தர் வந்தாரு. 'உங்களுக்கு தெரிஞ்சவங்களது இருந்தா கொடுத்து உதவி செய்ங்க'ன்னு சொன்னாரு. நானும் ஒவ்வொன்னா தேடி, 'இது எதிர்வீடு' 'இது பக்கத்து வீடு' 'இது கடைசி வீடு' 'இது பின்னாடி வீடு' என்று வகைப்படுத்தி கொடுத்தேன். கடைசியில எஙளோடது இல்ல. பார்த்தால் ஏற்கெனவே கொடுத்ததுக்கு அடையாளமா கையொப்பமிட்டிருந்தது. 'அது அந்த தெருவுல வாங்கிட்டாங்க சார்... நிச்சயமா உங்களுக்கு வந்து சேந்துடும்'னு சொன்னாரு.

இன்று ரெண்டு பேர் வந்தாங்க. அதுல ஒருத்தர் பார்த்த முகமா இருந்தார். ஸ்லிப்பைக் கொடுத்துட்டு பாக்கெட்டுல கையவிட்டு சில நூறு ரூபாய் தாள்களை தயங்கியபடி எடுத்தார். நான் 'அந்த பழக்கம் இல்லை' எனக் கூறி மறுக்க, உடன் வந்தவர் 'உங்களுக்கு வேண்டாம்னா வாங்கி கோயில் உண்டியல்ல போடுங்க... வண்டிக்கு பெட்ரோல் போடுங்க' என்று விளக்கம் கொடுத்தார். கொடுக்க வந்தவர், 'சார் வீட்டுல வாங்கமாட்டாங்கன்னு அங்க சொன்னாங்க' என்று குழைந்து அவமானத்தால் கூனி குறுகியபடி சென்றவரைப் பார்க்க பாவமாக இருந்தாலும், கொடுக்கச் சொன்ன மேலிடத்தின் மீது கோபம் இன்னும் அதிகமானது.

நிச்சயம் இவர்கள் நமக்கு ஓட்டுப்போட மாட்டர்கள் என அவர்கள் தெளிவுடன் போயிருப்பார்கள். பணப் பட்டுவாடா நடந்துகிட்டுதான் இருக்கு. இந்தத் தேர்தலில்தான் கண்கூடா பார்த்தேன்."

இதேபோன்ற அனுபவங்களை நீங்களும் கடந்து வந்திருக்கிறீர்களா? உங்கள் பகுதியில் பணப் பட்டுவாடா நடப்பதை நீங்கள் நேரடியாகப் பார்த்திருந்தால், அது எந்த மாதிரியான 'வழிமுறை'களில் நடக்கிறது?

இத்தகைய விவரங்களை கட்சியின் பெயர், வேட்பாளர் விவரம், தனிநபர்களின் பெயர்களைத் தவிர்த்துவிட்டு உண்மையில் உங்கள் தொகுதியில் நடப்பதை மட்டும் கீழே கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

நீங்கள் அளிக்கும் தகவல்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, அதிகாரிகளுக்கும் உதவுக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x