மதுரை காமராஜர் பல்கலை.யில் 10% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதில் மகிழ்ச்சி: ராமதாஸ்

பாமக நிறுவனர் ச. ராமதாஸ்  | கோப்புப் படம்.
பாமக நிறுவனர் ச. ராமதாஸ் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 10% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் தளத்தில் அடுத்தடுத்த பதிவுகளில், ''மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு அறிவிக்கப்பட்டிருந்த உயர் வகுப்பு ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

காமராஜர் பல்கலைக்கழகத்தின் சமூக அநீதியை பாட்டாளி மக்கள் கட்சிதான் அம்பலப்படுத்தியது. எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை ரத்து செய்யப்பட்டு 69% இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி.

தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்திற்கான இடஒதுக்கீட்டில் ரோஸ்டர் முறை செம்மையாக கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பபடுகிறது. இது குறித்தும் அரசு ஆய்வு செய்து சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in