

சென்னை: மதிமுக ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 25-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி: "மதிமு மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25.06.2022 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.