Published : 14 Jun 2022 06:41 AM
Last Updated : 14 Jun 2022 06:41 AM

தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அலுவலர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும், துணை ஆட்சியர்களாக இருந்த 6 பேர்,மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசின்தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு (தனி) மாவட்டவருவாய் அலுவலராக இருந்த செ.ஜெய, திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராகவும், அப்பதவியில் இருந்த ஆ.பெருமாள், திருச்சி ஆவின் பொது மேலாளராகவும், அப்பதவியில் இருந்த இரா.அபிராமி, திருச்சிமாவட்ட வருவாய் அலுவலராகவும், அப்பதவியில் இருந்த த.பழனிகுமார், சென்னை 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுக்கான மாவட்ட வருவாய் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநராக இருந்த க.சரஸ்வதி, விழுப்புரம் தேசியநெடுஞ்சாலை நில எடுப்பு (தனி)மாவட்ட வருவாய் அலுவலராகவும், கோவை நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டலமேலாளராக இருந்த பெ.மேனகா,சேலம் மாவட்ட வருவாய் அலுவலராகவும், அப்பதவியில் இருந்த வெ.ஆலின் சுனேஜா, சென்னை ஆவின் பொது மேலாளராகவும் (வர்த்தகம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிலைய இரண்டாம் கட்ட நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன், சேலம் ஆவின் பொது மேலாளராகவும், விடுப்பில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் ச.சங்கீதா, மதுரை(தனி) மாவட்ட வருவாய் அலுவலராகவும், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜகோபாலன், சென்னைமெட்ரோ ரயில் நிறுவன சட்டஅலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் ஆவின் பொது மேலாளர் ம.ச.கலைவாணி, அரியலூர்மாவட்ட வருவாய் அலுவலராகவும், நெய்வேலி நிலக்கரி சுரங்க நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராகவும், அப்பதவியில் இருந்த அ.ராஜசேகரன், கோவை நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளராகவும், விருதுநகர் மாவட்ட வருவாய்அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சென்னை வருவாய் நிர்வாக ஆணையரக துணை ஆணையராகவும் (நிர்வாகம்), அப்பதவியில் இருந்த ஜெ.ரவிக்குமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட வருவாய்அலுவலர் அ.மீனா பிரியதர்ஷினி, சென்னை நுகர்பொருள் வாணிபக்கழக வர்த்தகப் பிரிவு மாவட்ட வருவாய் அலுவலராகவும், அப்பதவியில் இருந்த பெ.அரவிந்தன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த சு.சுசோகன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், வேலூர் நில எடுப்பு மற்றும் மேலாண்மை (தனி)மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், தருமபுரி மாவட்ட கூட்டுறவுசர்க்கரை ஆலை மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், துணை ஆட்சியர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக இருந்த கிருஷ்ணன், நெய்வேலி நிலக்கரி சுரங்க நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருநெல்வேலி முத்திரைத்தாள் தனித் துணை ஆட்சியர் அ.மாரிமுத்து, தூத்துக்குடி இஸ்ரோ நில எடுப்பு (தனி) மாவட்ட வருவாய் அலுவலராகவும், ஈரோடு துணைஆட்சியர் இரா.பாலாஜி, ஒசூர்உதவி நிலவரி திட்ட அலுவலராகவும், மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் (கிழக்கு) ஆர்.ரமேஷ்,சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும், சேலம் கலால் உதவி ஆணையர் செ.தனலிங்கம், தமிழ்நாடு தகவல் ஆணையச் செயலராகவும், ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ப.ராஜ்குமார், வேலூர்நில எடுப்பு மற்றும் மேலாண்மைதனி மாவட்ட வருவாய் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x