

ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் தனியார் நிறு வன வாகனங்களில் பணம் கடத்தப் படுகிறதா என்பதை பறக்கும்படை யினர், வருமானவரித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின் றனர்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சென்னை அடுத்த அம்பத்தூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்கும் வாகனத்தை பறக்கும்படையினர் சோதனையிட்டதில் ரூ.11 லட்சம் சிக்கியது. ஆவணங்கள் இல்லாத தால் இப்பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. கடந்த சில தினங் களுக்கு முன் வேலூரில் வாகன சோதனையின்போது உரிய ஆவ ணங்களின்றி ஏடிஎம் இயந்திரங் களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.36 கோடி சிக்கியது. நேற்று முன்தினம் இரவு சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலை மற்றும் கிரியப்பா சாலை சந்திப்பில், ரூ.49.60 லட்சம் சிக்கியது. இதுவும் ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்துவதற்காக கொண்டுசென்றதாக கூறப்படு கிறது. ஆனால், உரிய ஆவணங் கள் காட்டப்படாததால், பணம் கரு வூலத்தில் சேர்க்கப்பட்டு விசா ரணை நடந்து வருகிறது.
உண்மையாகவே ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா அல்லது தேர்த லுக்காக கடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் ஏடிஎம் களுக்கு பணம் கொண்டுசெல்லும் தனியார் வாகனங்களை முழுமை யாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
பெட்ரோல் கூப்பன்
அதேபோல், அந்தியூர் தொகுதி யில் அதிமுக வேட்பாளரின் ஆதர வாளர் முருகேசன் என்பவர் பெய ரில் பொதுமக்களுக்கு அளிக்கப் பட்ட 91 பெட்ரோல் கூப்பன்களை மாவட்ட தேர்தல் செலவின பார்வை யாளர் பிடித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில், அதிமுக வினரால் விநியோகிக்கப்பட்ட 902 பெட்ரோல் கூப்பன்கள் பிடிபட் டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக 2 பெட்ரோல் பங்க்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் கூப்பன்
இது தொடர்பாக, தேர்தல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மணல் லாரிகள் ஒரே முறை வாங்கிய சீட்டை வைத்துக் கொண்டே பல லோடுகள் மணலை கொண்டு செல்வதைப்போல், பண மும் ஏடிஎம்களுக்காக என்ற கணக் கில் கொண்டுசெல்லப்படுவதாக சந்தேகிக்கிறோம். அதன் அடிப் படையில் கண்காணிப்பை தீவிரப் படுத்த முடிவெடுத்துள்ளோம்.
அதேபோல், பெட்ரோல் கூப்பன் அளிக்கப்படும் விவகாரத்தில், பெட் ரோல் பங்க் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைக்க வும் உத்தரவிடப்பட்டுள்ளது. கூப் பன் பிடிபடும்போது, அதில் குறிப் பிடும் தொகை ஆய்வு செய்யப்பட்டு, கொடுத்த அரசியல் கட்சிகளின் அந்த தொகுதி வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்’’ என்றார்.
தேர்தல் ஆணையம் சந்தேகம்
ஏடிஎம் இயந்திரங்களுக்கு வங்கிகள் நேரடியாக பணம் அனுப்புவதில்லை. ‘அவுட் சோர்சிங்’ முறையில் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் அளிக்கும் தகவல் அடிப்படையில், குறிப்பிடும் தொகையை, ஏடிஎம் இயந்திரங்களில் அந்த தனியார் நிறுவனங்கள் வைக்கின்றன.
அரசியல் கட்சிகள் இது போன்ற தனியார் நிறுவனங்களை அணுகி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பணத்தை கடத்த வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் சந்தேகிக்கிறது.