

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான் குடி அருகே 27 ஆண்டுகளுக்கு பிறகு ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம மக்களின் முயற்சியால் அரசு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
இளையான்குடி அருகே அரணையூரில் 3,000 பேர் வசிக் கின்றனர். இங்கு இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைந் ததால் மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மாணவர்கள் 3 கி.மீ. தொலைவிலுள்ள இளையான்குடி தனியார் பள்ளிகளில் படித்து வந் தனர்.
இந்நிலையில் பூட்டிக் கிடக்கும் பள்ளியை திறக்க ஊராட்சித் தலைவர் முனீஸ்வரி கணேசன் முயற்சி எடுத்தார். கிராம மக்களும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்தனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து பள்ளியை திறக்க அனுமதி பெற்றனர். அதன்பிறகு ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம மக்கள் நன்கொடை வசூலித்து, பள்ளி கட்டிடத்தை சீரமைத்தனர். மேலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதி களையும் ஏற்படுத்தினர். மேலும் 48 மாணவர்கள் சேர்க்கப் பட்டனர்.
இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அரணையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியும் திறக்கப்பட்டது. பள்ளியை எம்எல்ஏ தமிழரசி திறந்து வைத் தார்.
ஊராட்சித் தலைவர் முனீஸ்வரி கணேசன் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் முத்துசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஊர்க்காவலன், வட் டார கல்வி அலுவலர் சார்லஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மூடிக்கிடந்த பள்ளி 27 ஆண்டு களுக்கு பிறகு திறக்கப்பட்டதை அப்பகுதி மக்கள் ஊர் விழாவாக கொண்டாடினர்.