Last Updated : 23 May, 2016 09:39 AM

 

Published : 23 May 2016 09:39 AM
Last Updated : 23 May 2016 09:39 AM

காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராகிறார் கே.ஆர்.ராமசாமி

காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற கே.ஆர். ராமசாமி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்து சட்டப்பேர வையில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், நாங்குநேரி, காரைக்குடி, உதகமண்டலம், தாராபுரம், முது குளத்தூர் ஆகிய 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவி என்பது மிக முக்கியமானது. மாநிலத் தலைவரைப் போல சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற மேலிடத் தலைவர்களை எளிதில் சந்திக்க முடியும். மாநிலத் தலைவருக்கு இணையாக அனைத்து கூட்டங்கள், கமிட்டிகளில் சட்டப் பேரவை கட்சித் தலைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை, வேட்பாளர் தேர்வு கமிட்டி உள்ளிட்ட முக்கியமான கமிட்டிகளில் சட்டப்பேரவை கட்சித் தலைவரும் இடம்பெறு வார். எனவே, சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011 பேரவைத் தேர் தலில் காங்கிரஸ் 5 இடங்களில் வென்றது. ஓசூர் தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்ற கே.கோபிநாத் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார். இந்தத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்துள்ளதால் சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியைப் பெற கே.ஆர்.ராம சாமி (காரைக்குடி), எச். வசந்த குமார் (நாங்குநேரி), எஸ்.விஜய தரணி (விளவங்கோடு) ஆகியோர் தீவர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2014-ல் மாநிலத் தலைவர் பதவிக்கு முயற்சித்த வசந்தகுமாரால் அப்பதவியை பெற முடியவில்லை. எனவே, இந்த முறை எப்படியாவது சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற மேலிடத் தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். 2-வது முறையாக விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எஸ்.விஜய தரணி, இந்த முறை பெண் களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், காரைக்குடி தொகுயில் வெற்றி பெற்றுள்ள கே.ஆர்.ராமசாமியை சட்டப் பேரவை கட்சித் தலைவராக்க மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 6-வது சட்டப்பேரவைத் தேர்த லில் வெற்றி பெற்றுள்ள இவர், சட்டப்பேரவையில் 25 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர்.

முன்னாள் மத்திய நிதி அமைச் சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக இருந்தாலும் மற்ற தலைவர்க ளிடமும் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வருபவர். எனவே, அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வனும் ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் 'தி இந்து'விடம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சென்னைக்கு வந்த ராமசாமி, இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித் துப் பேசியது குறிப்பிடத்தக்க து. கே.ஆர்.ராமசாமி தலைவரா கவும், எச்.வசந்தகுமார் துணைத் தலைவராகவும், எஸ்.விஜயதரணி கொறடாவாகவும் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தமிழக காங் கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது, 'ஓரிரு நாட்களில் காங்கிரஸ் எம் எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். அதில் சட்டப் பேரவை கட்சித் தலைவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்' என்றார்.

எச்.வசந்தகுமார் துணைத் தலைவராகவும், எஸ்.விஜயதரணி கொறடாவாகவும் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x