சென்னை டிடிகே. சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை டிடிகே. சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
Updated on
1 min read

சென்னை: டிடிகே. சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிகே சாலையில் உள்ள கே.பி.தாசன் சந்திப்பில் மழை நீர் கால்வாய் பணி நடைபெறுவதால் வாகனங்கள் இன்று முதல் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகின்றன. இதன்படி அண்ணாசாலையில் இருந்து எஸ்ஐஇடி வழியாக வரும் பேருந்துகள், மற்றும் கனரக வாகனங்கள் திருவள்ளுவர் சாலை கே.பி தாசன் சந்திப்பில் இடது புறம் திரும்பி திருவள்ளுவர் சாலையில் சென்று எல்டாம்ஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பு ,மயிலாப்பூர் வழியாக இலக்கை அடையலாம் .

இரு சக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் கே.பி.தாசன், சீத்தம்மாள் காலனி 1வது தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி சீத்தம்மாள் காலனி பிரதான சாலையில் வலது புறம் திரும்பி டிடிகே சாலை சென்று அடையலாம்.

மறுமார்க்கத்தில் ஆழ்வார்ப்பேட்டை பாலத்தில் இருந்து இறங்கி நேராக சி.பி.ராமசாமி சாலை வழியாக சென்று காளியப்பா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அபிராமபுரம் 2வது பிரதான சாலை வழியாக கிண்டி, நந்தனம் வழியாக இலக்கை சென்று அடையலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in