தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் தமிழகத்தில் பறிமுதல் தொகை ரூ.100 கோடியை தாண்டியது: 18,828 புகார்கள் வந்திருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் தமிழகத்தில் பறிமுதல் தொகை ரூ.100 கோடியை தாண்டியது: 18,828 புகார்கள் வந்திருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
Updated on
2 min read

தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழகம் முழு வதும் பறக்கும்படையினர், கண் காணிப்புக் குழுவினர், வருமான வரித் துறையினரால் பறிமுதல் செய் யப்பட்டுள்ள பணம் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக் கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணை யம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று முதல் பறக்கும்படையினர் எண்ணிக்கை 7,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல தொகுதிகளில் கூடுதல் பார்வை யாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்புகிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ.68 கோடியே 56 லட்சம், வருமானவரித் துறையினரால் ரூ.32 கோடியே 30 லட்சம் என இதுவரை ரூ.100 கோடியே 88 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமும் 12 ஆயிரம் பேர் புகார்

தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 18,828 புகார்கள் வந்துள் ளன. வாட்ஸ்அப் மூலம் 1,379 புகார்கள் வந்துள்ளன. தினமும் சராசரியாக 12,500-க்கும் மேற்பட்ட வர்கள் தொலைபேசி மூலம் கட்டுப் பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கின்றனர். புகார்களை பெறுவதற்காக கட்டுப் பாட்டு அறையில் ஷிப்ட் முறையில் 120 பேர் பணியாற்றுகின்றனர்.

தமிழகம் முழுவதும் பூத் சிலிப் வழங்கும் பணி 11-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. இனி பூத் சிலிப் வழங்கப்படாது. வாக்காளர் அடை யாள அட்டை உள்ளிட்ட 11 ஆவ ணங்களைக் கொண்டு வாக்கா ளர்கள் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் உரிமம் பெற்ற 19,270 துப்பாக்கிகள் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கூடுதல் பாதுகாப்பு

தமிழகத்தில் உள்ள 66,001 வாக் குச்சாவடிகளில் 22,961 சாவடிகளில் வாக்குப்பதிவு நிகழ்வுகள் இணைய வழி கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது. 10,000 வாக்குச்சாவடி களில் வீடியோ கேமரா பதிவு செய் யப்படுகிறது. 8,655 நுண் பார்வை யாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த வகையில் 58 சதவீத வாக் குச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதற்ற மான வாக்குச்சாவடிகளில் இணைய வழி கேமரா பதிவு அல்லது வீடியோ கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் இருப்பார்கள். போதிய அளவு துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்படும்.

மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் உடனடி யாக அதை மாற்ற ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இதற்காக 20 சதவீத இயந்திரங்கள் கூடுதலாக இருப் பில் வைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளிலும் மகளிர் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகாரி, ஊழியர்கள், முக வர்கள், போலீஸார் என அனை வரும் பெண்களாக இருப்பர். இதுதவிர 968 மாதிரி வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள் ளன. வாக்குப்பதிவின்போது காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை 2 மணி நேரத்துக்கு ஒருமுறையும், மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை அரை மணி நேரத்துக்கு ஒருமுறையும் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர் தல் அதிகாரிக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் தலைமை அலுவலர் மட்டுமே கைபேசி பயன் படுத்த அனுமதி உண்டு. அரசியல் கட்சிகளின் முகவர்கள் பயன்படுத் தினால் உடனே பறிமுதல் செய் யப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in