Published : 13 Jun 2022 06:15 AM
Last Updated : 13 Jun 2022 06:15 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி அலுவல கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த தகவல்களால், நகராட்சி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் வர தயங்குகின்றனர்.
ஆணையர், பொறியாளர், சுகாதார அலுவலர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த சங்கவி உள்ளார். நகராட்சி பொறியாளர் பாண்டு, பல்வேறு குற்றச் சாட்டுகளுக்கு ஆளான நிலையில் அண்மையில், நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
விருத்தாசலம் நகராட்சி பொறியாளராக ஜெயப் ரகாஷ் என்பவர் பொறுப்பேற்றார். அதேபோன்று டீசல் கொள்முதல் மற்றும் பிளீச்சிங் பவுடர் கொள் முதல் முறைகேடு புகாரில் சுகா தார அலுவலர் முத்துகணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போது ஆணையராக இருந்தஅருள்செல்வன், நகராட்சியில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து அறிந்து, 6 மாதங்களிலேயே பணி யிட மாறுதல் பெற்று சென்னைக்கு சென்றுவிட்டார்.
நகராட்சி பொறியாளர் ஜெயப்ரகாஷ் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். அதோடு முறைகேடுகள் குறித்து விசாரணையும் மேற்கொண்டார். இந்நிலையில் ஜெயப்ரகாஷ் வந்தவாசி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட் டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சசிகலா என்பவர் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார். தற்போது அவரும் பணியிட மாறுதலில் சென்றுள்ளார்.
இதையடுத்து நகராட்சிக்கு மாற்று ஆணையர், பொறியாளர், சுகாதார அலுவலர் உள்ளிட்டோர் பணியமர்த்த நகராட்சி நிர்வாக ஆணையரகம் நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, விருத்தா சலம் நகராட்சியில் பணிபுரிய எந்த அலுவலரும் விருப்பம் தெரி விக்கவில்லையாம். இதையடுத்து சிலருக்கு நகராட்சியில் பணியாற்ற பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள், ஏற்க மறுத்து, வேறு இடத்திற்கு மாறுதல் கேட்டுள்ளனராம்.
கடந்த காலங்களில், விருத்தாசலம் நகராட்சியில் ஆணையர் களாக பணியாற்றிய பாலு, ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய நிலையில் அவர்களும் மாற்றப்பட்டனர். தற்போதும் அந்த நிலை தொடர்வதால் அலுவலர்கள் மத்தியில் விருத்தாசலம் நகராட்சியில் பணிபுரிய அச்சம் ஏற்பட் டுள்ளதாம். இதனால் விருத்தாசலம் நகராட்சியில் ஆணையர், பொறி யாளர், சுகாதார அலுவலர் உள் ளிட்ட முக்கிய பணியிடங்கள் காலி யாக உள்ளன.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் சங்கவியிடம் கேட்டபோது, "நகராட்சி நிர்வாக ஆணையரகம் விருத்தாசலம் நகராட்சியின் முக்கியப் பணியிடங்களுக்கு அலுவலர்களை பணியமர்த்தி ஆணைப் பிறப்பித்துள்ளதாக அறிகிறேன்.
விரைவில் அவர்கள் பணியில் வந்து சேருவார்கள் என நம்பிக்கையுடன் உள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT