Published : 13 Jun 2022 06:35 AM
Last Updated : 13 Jun 2022 06:35 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். கூட்டத்தில், ராஜபாளையம் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கி.வீரமணி பேசியதாவது: திராவிட மாடல் என்றால் என்ன? எனப் பலர் கேட்கின்றனர். திராவிடமாடல் ஆட்சி என்பதற்கு ராஜபாளையம் நகராட்சி ஒரு சாட்சி. 42 கவுன்சிலர்களில் 22 பேர் பெண் கவுன்சிலர்கள்.
இதுவே திராவிட மாடல். சமூக நீதி, சமூக நலனை மேம்படுத்துவதுதான் திராவிட மாடல். தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக அளவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, இன்று தலைவர்களாகவும், கவுன்சிலர்களாகவும் ஏராளமான பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதான் திராவிடமாடல். இவ்வாறு அவர் பேசினார்.
நாஞ்சில் சம்பத், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT