Published : 13 Jun 2022 06:00 AM
Last Updated : 13 Jun 2022 06:00 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று (13-ம் தேதி) இரவு பக்தர்கள் பவுர் ணமி கிரிவலம் செல்ல உள்ளனர்.
“மலையே மகேசன்” என போற்றப்படும் திருவண்ணா மலையில் உள்ள அண்ணா மலையை 14 கி.மீ., தொலைவுக்கு பவுர்ணமி நாளில் வலம் வந்து பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி, இன்று (13-ம் தேதி) இரவு 8.17 தொடங்கி நாளை (14-ம் தேதி) மாலை 5.53 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு, வைகாசி மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பவுர்ணமியை யொட்டி, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்நிலையில், வைகாசி விசாகத்தையொட்டி, திருவண்ணா மலையில் உள்ள அண்ணா மலையார் கோயிலில் நேற்று பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், பக்தர் களின் வருகை வழக்கம்போல் காணமுடிந்தது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் மற்றும் அம்மனை வழிபட்டனர். மேலும், அண்ணா மலையார் கோயிலில் உள்ள முருகர் சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல், வில்வாரணி உட்பட மாவட்டத்தில் உள்ள முருகர் கோயில்களில் நேற்று நடைபெற்ற வைகாசி விசாக சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT