அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து அண்ணாமலை கேட்கவில்லை: சீமான்

அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து அண்ணாமலை கேட்கவில்லை: சீமான்
Updated on
1 min read

நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுதினம் திருநெல்வேலி ரஹ்மத் நகரில் அனுசரிக்கப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பெருஞ்சித்திரனார் புகைப்படத் துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத மோதல்களை தூண்டி நாட்டில் பிரிவினை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கடன் 90 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. 7,000 கோடி ரூபாயை இந்தியா இலங்கைக்கு கொடுப்பதால் என்ன பயன். 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்த திமுகவுக்கு கச்சத்தீவை மீட்க நேரம் கிடைக்கவில்லை. இலங்கையை விட மோசமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதனை மறைக்க நினைக்கிறார்கள். மத்திய அரசின்

8 ஆண்டு காலமும், தமிழக அரசின் ஓராண்டு காலமும் சாதனையல்ல, வேதனை.

ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழலை சுட்டிக்காட்டும் அண்ணாமலை அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து கேட்கவில்லை. தமிழகத்தின் ஒரே எதிர்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது. 2024- ல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in