

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி குமார் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியது:
திகரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்சேவைகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கரோனாவின்போது நிறுத்தப்பட்ட அனைத்து ரயில் சேவைகளையும் உடனே இயக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்-புதுச்சேரி, விழுப்புரம்-சென்னை போன்ற பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்குவதற்கான தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். விழுப்புரம் -காட்பாடி இடையே இரட்டை ரயில்பாதை அமைக்க ஆய்வு நடைபெற்று வருகிறது.
தற்போதைய இருப்பு பாதையின் திறனைக் கணக்கில் கொண்டு,ரயில்களின் வேகத்தை அதிகரித்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேகத்தை சற்று அதிகரிப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்க முடியும் என்றார்.