Published : 11 May 2016 09:13 AM
Last Updated : 11 May 2016 09:13 AM

பணம், மதுபானம் கடத்தலை தடுக்க 4 மாநில எல்லைகள் மூடல்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

பணம், மதுபானம் கடத்தலையும், சமூக விரோதிகள் நடமாட்டத்தை யும் கட்டுப்படுத்த தமிழகத்தை ஒட்டிய 4 மாநில எல்லைகள் மூடப் பட்டுள்ளன. அங்கு சோதனைச் சாவடிகளை அதிகரித்து, கண் காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள தாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரி வித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், வாக்கு பதிவுக் கான ஏற்பாடுகளை தேர்தல் துறை யினர் தீவிரப்படுத்தியுள்ளனர். நடத்தை விதி மீறல்களை தடுக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பண பட்டு வாடாவை தடுக்க பறக்கும்படை யினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் எல்லைப் பகுதி களில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில் கேரளா, புதுச்சேரி மாநிலங்களிலும் மே 16-ம் தேதி தேர்தல் நடக்கிறது. எனவே, இந்த 4 மாநிலங்களின் எல்லைகளையும் தீவிரமாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயல கத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், தேர்தல் டிஜிபி, தலைமைத் தேர்தல் அதி காரி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை ஆணையர், வருமானவரி புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஆகியோருடன் டெல்லியில் இருந்த படி தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஆலோசனை நடத்தி னார். அப்போது ஆணையர்கள் ஓ.பி.ராவத், ஏ.கே.ஜோதி ஆகி யோர் உடன் இருந்தனர். இந்த ஆலோசனையில் பல்வேறு முடிவு கள் எடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

ஆந்திரா, கர்நாடகா மாநிலங் களில் தேர்தல் நடக்கவிலலை. எனவே, தமிழக எல்லையை ஒட்டிய இந்த மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மே 14,15,16 மற்றும் 19 ஆகிய 4 நாட்களும் மூட அந் தந்த மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச் சேரி மாநிலங்களை ஒட்டிய தமிழக எல்லைகள் மூடப்படுகின்றன. இந்த மாநிலங்களில் இருந்து தமிழகத் துக்கு மதுபானம், பணம் கடத்தப் படுவதையும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தையும் தடுக்க எல்லை களில் உள்ள சோதனைச் சாவடி களின் எண்ணிக்கை தேர்தலுக்கு முந்தைய 2 நாட்களும் அதிகரிக்கப் படும். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்படும். புதுச்சேரியில் இருந்து குறைந்த விலை மது, கேரளாவில் இருந்து அரக்கு மற்றும் கள் ஆகியவை தமிழகத்துக்குள் கொண்டுவருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொகுதிகளின் மண்டல குழுக் களும் பறக்கும்படைகளாக மாற்றப் பட்டு தொகுதிக்கு 25 பறக்கும் படைகள் ரோந்துப் பணியில் ஈடு படுத்தப்படும். இந்தப் பணி 11-ம் தேதியில் (இன்று) இருந்து தொடங் கும். பறக்கும்படைகள் 3 ஷிப்ட் களாக பணியாற்றும். சென்னையில் உள்ள தொகுதிகளில் 8 பறக்கும் படையினர் 3 ஷிப்ட்களாக பணி யாற்றுவர். இவர்கள் பதற்றமான பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப் பில் ஈடுபடுவர். தமிழகம் முழுவ தும் 5 ஆயிரத்து 644 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். இவற்றில் 1,500-க் கும் மேற்பட்ட பறக்கும்படைகளில் துணை ராணுவப் படையினர் இருப்பர். பறக்கும்படை பணியில் இருக்கும் மண்டல குழுக்கள், 15-ம் தேதி மின்னணு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடு வர்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் களுக்கு வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை அரியலூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை மாவட் டங்களில் 48 சதவீதமும், மற்ற மாவட்டங்களில் 61 சதவீதமும் பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்பணி 11-ம் தேதி மாலை 5 மணியுடன் முடிகிறது. மீதமுள்ள பூத் சிலிப்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் வழங்கப்படாது.

கடந்த தேர்தல்களில் வாக்குச் சாவடி மையத்தின் முன்பாக, வாக்குச்சாவடி அலுவலர்கள் அமர்ந்து பூத் சிலிப் வழங்கினர். இந்த தேர்தலில் அந்த நடைமுறை இல்லை. பூத் சிலிப் வழங்கும் பணியை நீட்டிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தர வுக்கு காத்திருக்கிறோம்.

பூத் சிலிப் கிடைக்காத, கைபேசி எண்ணை பதிவு செய்துள்ளவர்கள் தங்கள் கைபேசியில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, ‘1950’ என்ற எண் ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் பாகம், வரிசை எண், வாக்குச்சாவடி விவரங்கள் அனுப்பப்படும்.

தேர்தலுக்கான இறுதி ஏற் பாடுகள், கண்காணிப்பு சோதனை கள் குறித்து தொகுதிகளில் நியமிக் கப்பட்டுள்ள பொது, செலவின பார்வையாளர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஆலோசனை நடத்துகிறார். இன்று (10-ம் தேதி) 16 மாவட்டங்களிலும் நாளை (11-ம் தேதி) மீதமுள்ள 16 மாவட்டங்களிலும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்படுகிறது.

மின்னணு இயந்திரங்களில் வேட் பாளர் பெயர், சின்னம், புகைப் படம் ஒட்டும் பணி தொடங்கி யுள்ளது. வேலூர், அம்பாசமுத்திரம் தொகுதிகளைத் தவிர மற்ற தொகு திகளில் பணிகள் நடந்து வருகின் றன. இந்த 2 தொகுதிகளில் வேட் பாளர் படம் மாறியதால், புதிதாக அச்சடிக்கும் பணி நடக்கிறது. இப்பணிகள் 12-ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x