Published : 27 May 2016 10:06 AM
Last Updated : 27 May 2016 10:06 AM

மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவில் கனிமொழி பங்கேற்பார்

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்கிறார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜி 2-வது முறையாக முதல்வராக இன்று பதவியேற்கிறார். கொல்கத்தாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

அதனை ஏற்று பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலை வருமான கனிமொழி பங்கேற்பார் என திமுக அலுவலகம் தெரிவித்து உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x