Last Updated : 11 Jun, 2022 06:18 AM

 

Published : 11 Jun 2022 06:18 AM
Last Updated : 11 Jun 2022 06:18 AM

புதுச்சேரியில் செயற்கை கருவூட்டல் மூலம் குட்டி ஈன்ற முதோல் வேட்டை நாய்

புதுச்சேரி: செயற்கை கருவூட்டல் மூலம் கருவுற்று குட்டியை ஈன்றது முதோல் வேட்டைநாய். இன அபிவிருத்தி மேம்பாட்டு யுத்திகள் செய்யும்வசதிகளால் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் பயன்பெறலாம் என்று மருத்துவர்கள் அறிவு றுத்தியுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த முதோல் (Mudhol) வேட்டை நாய்கள், கென்னல் கிளப் ஆப் இந்தியாவால் அங்ககீகரிக்கப்பட்டது. இந்த இனம் வேட்டை நாயாக கருதப்பட்டாலும், தற்போது துணை நாயாகவும், காவல் நாயாகவும் வளர்க்கப்படுகிறது.

புதுச்சேரியில் செயற்கை கருவூட்டல் முறையை பயன்படுத்தி இந்நாய் இனம் விருத்தி செய்யப்பட்டது தொடர்பாக புதுச்சேரியில் உள்ள ராஜீவ்காந்தி கால்நடை மருத்து வக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஈனியல் துறையில் செயற்கை முறை கருவூட்டல் நிபுணர்கள் டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் காந்தராஜ் ஆகியோர் கூறி யதாவது:

புதுச்சேரியில் உள்ள ராஜீவ்காந்தி கால் நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆண், பெண் இனத்தைச் சேர்ந்தமுதோல் வேட்டை நாய்க்குட்டி வாங்கப்பட்டு அறிவியல் ரீதியாக பராமரிக்கப்பட்டு வளர்ந்துவருகிறது. பருவமடைந்து மற்றும் பாலுறவு முதிர்ச்சியடைந்த பிறகு இனப்பெருக்கக் காலத்தில் இரண்டும் உடல் இனச்சேர்க்கை நெருக்கத்திற்கு ஒன்றாக சேரவில்லை.

இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் உள்ளகால்நடை ஈனியல் துறையில் ஆண் நாயிடம்இருந்து செயற்கை முறையில் விந்து சேகரித்துஆரா யப்பட்டது. பெண் நாய்க்கு இனப்பெருக்க காலத்தில், கருமுட்டை வெளிவரும் நேரத்தைகணித்து செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டது. அதன்பின் அதிர்வெண் ஒலிமூலம் நுட்பமாக ஆராய்ந்து ஒற்றை கருவுடன் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சினைப் பருவக்காலம் முழுவதும் அதிர்வெண் ஒலிமூலம் கருவின் இதய துடிப்பு, அசைவு, ஆரோக்கியத்தை கண்டறியப்பட்டது. சினை பருவக்காலம் முடிந்ததும் கருவறையின் வாய் திறவா மல் குட்டி ஈனும் எந்த அறிகுறியும் வெளிப்படுத்தாமல் இருந்ததால் மீண்டும் அதிர்வெண் ஒலி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையில் நாய்க்குட்டி இதய துடிப்பும், அசைவும் வெகுவாக குறைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் 400 கிராம் எடைகொண்ட ஒரு பெண் நாய்க்குட்டி பிறந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாயும், சேயும் நன்கு குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளனர். சினையாகாமல் இருந்தமுதோல் வேட்டை நாயை, பல யுத்தியை பயன்படுத்தி வெற்றிகரமாக இன அபிவிருத்தி செய்துள்ளோம் என்றனர்.

கல்லூரி முதல்வர் செஜியன் கூறுகையில், “இன அபிவிருத்தி மேம்பாட்டு யுத்திகள் செய்யும் வசதிகளால் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் பயன்பெறலாம்” என்று குறிப் பிட்டார்.

400 கிராம் எடைகொண்ட ஒரு பெண் நாய்க்குட்டி பிறந்தது. தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x