

சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் 2-ம் கட்டரகசிய அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த2012 மார்ச் 29-ம் தேதி கொடூரமானமுறையில் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் ஈடுபட்டகுற்றவாளிகளை சிபிஐ போலீஸாராலும்கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், ராமஜெயத்தின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரன் இந்த வழக்கை தமிழக போலீஸாரே விசாரிக்க வேண்டும் எனஉயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.
இதையடுத்து, கொலை வழக்கை விசாரிக்கஎஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிபதி வி.பாரதிதாசன் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.
இக்குழு தனது முதல்கட்ட அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது. குற்றவாளியை நெருங்கி விட்டோம் என்று அதில் கூறியிருந்தது.
இந்நிலையில் நீதிபதி ஆர்எம்டி டீக்காராமன் முன்பு இந்த வழக்குநேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சிறப்பு புலனாய்வுக் குழு தனது 2-ம் கட்ட ரகசியஅறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
அதை படித்துப் பார்த்த நீதிபதி, அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 வாரம்அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.