Published : 17 May 2016 09:46 AM
Last Updated : 17 May 2016 09:46 AM

அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச் சர் வி.செந்தில்பாலாஜி, திமுக சார் பில் தற்போதைய எம்எல்ஏ கே.சி.பழனிசாமி போட்டியிடுகின்றனர்.

வருமான வரி சோதனையில் அதிகளவில் பணம் கைப்பற்றப் பட்டது மற்றும் அதிக புகார்கள் காரணமாக அரவக்குறிச்சி தொகுதி யில் வாக்குப்பதிவு வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அத்தொகுதி வாக்காளர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாக்களிப்பதற்காக ஊருக்கு வந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். பணி நிமித்தமாக மீண்டும் வெளியூருக்குச் செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகியுள் ளனர்.

தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ எம்.ரங்க சாமி, திமுக சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதி இடையே கடும் போட்டி காணப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப் பட்டு உள்ளது.

விடிந்தால் வாக்குப்பதிவு என்ற நிலையில், வாக்குச்சாவடிகளில் இரவு முதலே தயார் நிலையில் இருந்த அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களை போலீஸ் பாதுகாப்புடன், மீண்டும் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தனர். வெளியூர் களிலிருந்து தேர்தல் பணிக்காக வந்திருந்த பெண் அலுவலர்கள் இரவில் வாக்குச்சாவடிகளிலேயே தங்கிவிட்டு, நேற்று அதிகாலை தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தால் வாக்குச்சாவடிகள் வெறிச் சோடிக் காணப்பட்டன. தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தகவல் தெரி யாத சிலர், வாக்குச்சாவடிகளுக்கு சென்றபோது, அவை பூட்டப்பட்டி ருந்ததை அறிந்து அதிருப்தியுடன் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x