Published : 11 Jun 2022 07:54 AM
Last Updated : 11 Jun 2022 07:54 AM
குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று 183 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஜமாபந்தியில் மொத்தம் 1,007 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களில் 151 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 28 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, 4 பயனாளிகளுக்கு சிட்டா அடங்கல் நகல்கள் என மொத்தம் 183 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை, வருவாய் கோட்டாட்சியர் பா.சைலேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பெ.பாபு, வட்டாட்சியர் கல்யாணசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT