பார்வையற்றோர் பிரிவில் கார் ஓட்டுநர் மகன் முதலிடம்

பார்வையற்றோர் பிரிவில் கார் ஓட்டுநர் மகன் முதலிடம்
Updated on
1 min read

பார்வையற்றோர் பள்ளிகள் அளவில் பாளையங்கோட்டை யிலுள்ள பார்வையற்றோர் மேல் நிலைப் பள்ளி மாநில அளவில் முதல் மற்றும் 2-ம் இடங்களை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

இப்பள்ளி மாணவர் கோ.கிருஷ்ணகுமார் 489 மதிப் பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தூத்துக் குடி மாவட்டம், செய்துங்கநல்லூ ரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கோவர்த்தனன் - சந்திரகனி தம்பதியரின் மகனான இவர், பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். 1-ம் வகுப்பு முதல் இதே பள்ளியில் படித்துவந்தார்.

கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘பிரெய்லி முறையில் பாடங்களைப் படித்து ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினேன். ஆங்கில இலக்கியம் கற்று கல்லூரியில் பேராசிரியராக வேண்டும் என்பதே எனது லட்சியம்’ என்றார்.

2-ம் இடம்

இதே பள்ளியில் படித்த பார்வையற்ற மாணவி மு.ராணி 470 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஜம்புலிங்கபுரம் காலனி தெரு வைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி முருகேசனின் மகளான ராணி, ‘ஆங்கில இலக் கியம் கற்று கல்லூரியில் பேராசி ரியராக வேண்டும் என்பதே தன் இலக்கு’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in