Published : 18 May 2016 10:06 AM
Last Updated : 18 May 2016 10:06 AM

3 மாத உழைப்பு மாநில அளவில் மதிப்பெண் பெற்றுத் தந்தது: தேர்வில் சாதித்த கட்டிடத் தொழிலாளி மகள் பூரிப்பு

‘பள்ளியில் நடந்த தேர்வுகளில் 1,100 மதிப்பெண் கூட பெறாத சாதாரண மாணவியாகத்தான் இருந்தேன். கடைசி 3 மாத உழைப் பால் இன்று மாநி லத்தில் 2-ம் இடத்தையும், மாவட்டத்தில் முதலி டத்தையும் பிடித்துள்ளேன்’ என ஆச்சர்யம் குறையாமல் பேசுகிறார் மாணவி கே.சிவசத்யா.

கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தைச் சேர்ந்தவர் காளி முத்து. இவரது மனைவி ஈஸ்வரி. கட்டிடத் தொழிலாளிகளான இத்தம்பதியின் மகள் சிவசத்யா. இவர் ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,178 மதிப்பெண் பெற்று, அரசுப் பள்ளி மாணவ, மாணவர் களில் மாநிலத்திலேயே 2-ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ் 193, ஆங்கிலம் 187, புள்ளியி யல், பொருளாதாரத்தில் தலா 200 மதிப்பெண், கணக்குப் பதிவியல், வணிகவியலில் தலா 199 மதிப்பெண் பெற்றி ருக்கிறார்.

அரசுப் பள்ளி மாணவியாக வும், சாதாரண கட்டிடத் தொழி லாளியின் மகளாகவும் இருந்து கொண்டு, மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

சிவசத்யா கூறும்போது, ‘நான் இவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறேனா என்பது ஆச்ச ரியமாக இருக்கிறது. பள்ளித் தேர்வுகளில் 1,100 மதிப்பெண் கூட பெற்றதில்லை. கடைசியாக 3 மாதங்கள் மட்டுமே நன் றாகப் படித்தேன். அதுவே இவ் வளவு மதிப்பெண் பெற் றுக் கொடுத்திருக்கிறது என் றால், ஆண்டு முழுவதும் படித் திருந்தால் அரசுப் பள்ளி மாண வியான நான்தான் அனைத் திலும் முதலிடம் பிடித்திருப்பேன். தனியாக டியூசன் எதுவும் செல்லாமல், எங்கள் பள்ளியி லேயே எல்லோரையும் போல சிறப்பு வகுப்புகளுக்குச் சென் றேன்.

நல்ல மதிப்பெண் எடுத் துள்ளேன். அடுத்ததாக சிஏ படித்து பட்டயக் கணக்காளராக வேண்டுமென விருப்பம் உள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x