Published : 12 May 2016 08:56 AM
Last Updated : 12 May 2016 08:56 AM

கொளத்தூரில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதால் முக்கியத்துவம் பெறுகிறது

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகு தியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டா லின் சென்னை கொளத்தூர் தொகு தியில் 2-வது முறையாக போட்டி யிடுகிறார். அவரை எதிர்த்து ஜே.சி. டி.பிரபாகர் (அதிமுக), பி.மதிவாணன் (தேமுதிக), கே.டி.ராகவன் (பாஜக), எஸ்.கோபால் (பாமக), எஃப்.சேவியர் பெலிக்ஸ் (நாம் தமிழர் கட்சி) உட்பட 24 பேர் களத்தில் உள்ளனர்.

துர்கா ஸ்டாலின்

மழை, வெள்ள பாதிப்புகளின் போது ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உதவிக ளை வழங்கினார். பல இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத் தினார். இதனால் கொளத்தூரில் எல்லோரும் அறிந்த வேட்பாளராக ஸ்டாலின் இருப்பதை நேரில் காண முடிந்தது.

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருவதால் கொ ளத்தூரில் இதுவரை 2 நாள்கள் மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளார். எனவே, அவரது மனைவி துர்கா வதி வீடு, வீடாகச் சென்று பிரச் சாரம் செய்து வருகிறார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பே கொளத்தூர், பெரியார் நகர், பெர வள்ளூர், செந்தில் நகர், பூம்புகார் நகர், அயனாவரம், சீனிவாச நகர், ஜவகர் நகர், செம்பியம், திருவிக நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த நிர்வாகிகள் உதவியுடன் கடந்த 10 நாள்களாக தினமும் மாலை நேரங்களில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

திமுக வழக்கறிஞர் அணிச் செ யலாளர் இரா.கிரிராஜன், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு, கொளத்தூர் பகுதிச் செயலாளர் ஐசிஎப் முரளி ஆகியோர் தலைமையில் திமுகவினர் இப்பகு தியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் பிரச்சாரம்

இதுதவிர காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி யினரும் ஸ்டாலினுக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று காங் கிரஸ் மூத்த தலைவர் டி.யசோதா, இதயத்துல்லா உள்ளிட்டோர் கொ ளத்தூர், ரெட்டேரி சிக்னல், கங்கா திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீ்ப்பில் பிரச்சாரம் செய்தனர். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள பூரண மதுவிலக்கு, லோக் ஆயுக்தா உட்பட பல்வேறு அம்சங்களை குறிப் பிட்டு அவர்கள் வாக்கு சேகரித்தனர்.

100 யூனிட் இலவசம்

ஸ்டாலினுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் அதிமுக வேட் பாளர் ஜே.சி.டி. பிரபாகர் பிரச்சாரம் செய்து வருகிறார். 1984-ல் இருந்து தேர்தல் களத்தில் இருப்பதும், கடந்த தேர்தலில் பக்கத்து தொகுதியான வில்லிவாக்கத்தில் வெற்றி பெற்ற தும் அவருக்கு கை கொடுக்கிறது. நேற்று காலை ரெட்டேரி சிக்னல், விநாயகபுரம், கொளத்தூர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார். அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிடும் அவர், 100 யூனிட் வரை இலவச மின்சாரம், ஸ்கூட்டர் வாங்க 50 சதவீத மானியம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை எடுத்துக் கூறியும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

சளைக்காத தேமுதிக

மக்கள் நலக் கூட்டணி - தமாகா ஆதரவுடன் போட்டியிடும் மதி வாணன் சளைக்காமல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று பெரியார் நகர், திருவிக நகர் மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதியில் பிரச் சாரத்தில் ஈடுபட்டார். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, தமா காவினரையும் அவரது பிரச்சாரத்தில் காண முடிந்தது. கருணாநிதி, ஜெய லலிதாவுக்கு மாற்றாக விஜயகாந்தை முதல்வராக்க வேண்டும் என அவர் பிரச்சாரம் செய்கிறார்.

பாஜக மாநிலச் செயலாளர் ராகவன் ஸ்டாலினை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே விரும்பி இங்கு களமிறங்கியுள்ளார். ஸ்டாலினை மட்டுமே குறிவைத்து இவர் பிரச்சாரம் செய்கிறார். ஜி.கே. எம். காலனி, கொளத்தூர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிக ளில் நேற்று இவர் பிரச்சாரம் செய்தார். தனது பிரச்சாரத்தை உடனுக்குடன் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவு செய்து விடுகிறார். பாஜகவின் மற்ற வேட்பாளர்களைப் போல இவரும் பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்து வருகிறார்.

பாமக வேட்பாளர் எஸ்.கோபால் நேற்று கொளத்தூர், செந்தில் நகர், பூம்புகார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். பாமக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை துண்டுப் பிரசுரங்களாக விநியோகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சேவியர் பெலிக்ஸ், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சி.வேலன் ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதால் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது கொளத்தூர் தொகுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x